சென்னை:குழந்தைகள் தினத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகிறோம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையே அவர் குழந்தைகள் மேல் கொண்ட அன்பை கொண்டாடும் வகையில் கொண்டாடுகிறோம்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாம் சில உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போது தான் குழந்தைகள் இந்த உலகை புரிந்து கொள்கின்றனர். தங்கள் வீட்டை தாண்டி உலகத்திற்குள் முதன்முதலாக நுழைகின்றனர். அந்த உலகில் ஆசிரியர்கள் சக குழந்தைகள் புதிதாக பாடநூல்கள் ஆகியவை இருக்கின்றன. மேலும் பள்ளிக்கூடம் என்கிற ஒரு கட்டடம் அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றாக மாறுகிறது. அதிக நேரம் செலவழிப்பது பள்ளியில் தான்.