சென்னை:தமிழ்நாடு அரசு ஐஐடி மெட்ராஸ் உடன் இணைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களில் பயில ஏதுவாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் மூலம் அரசுப் பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி பயிலும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 14 வாரம் ஐஐடிஎம் நடத்தும் தகுதி தேர்வுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் 20 மேற்பட்ட மாவட்டங்களில் ஐஐடிஎம் தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களில் 87 மாணவர்கள் B.S தரவு அறிவியல் மற்றும் செயலி என்ற நான்காண்டு இளநிலை பட்டப்படிப்பு தேர்வாகி உள்ளனர். இதில் 39 பேர் பெண்கள். அதில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் என 58 பள்ளிகளில் பயிலும் 192 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வில் சென்னை சேர்ந்த 68 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வருமான அடிப்படையில் 75 விழுக்காடு கல்வி ஊக்கத்தொகை கல்வி நிறுவனம் வழங்குகிறது. மேலும், தகுதிடைய மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் முழு கல்வி செலவினை ஏற்கிறது.
இந்நிலையில் ஐஐடிஎம் கல்வி நிலையத்தில் வரும் கல்வி ஆண்டில் B.S. தரவு அறிவியல் மற்றும் செயலி இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான சேர்க்கை ஆணையினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐஐடிஎம் இயக்குநர் காமகோடி ஆகியோர் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஐடிஎம் இயக்குநர் காமகோடி, "எங்கள் பி எஸ் (BS) திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்பது தான் 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் சமூக பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
இதற்கு முழு ஒத்துழைப்பு தரும் தமிழக அரசுக்கு நன்றி. மேலும், அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற செயல்முறை தொடங்கப்பட்டு, 87 மாணவர்களுக்கு இன்று சேர்க்கை சான்று வழங்கப்படுகிறது. இது நான் இயக்குநர் ஆனதுக்கான மிகப்பெரிய பரிசு. இன்னும் 10 ஆண்டுகளில் இதில் உள்ள மாணவ மாணவிகள் உலகளவில் உள்ள நிறுவனங்களில் தலைமை நிர்வாகத்தில் இருப்பார்கள்.
இது சுலபமான தேர்வு கிடையாது, ஆனால் இந்த தேர்வை எழுதி வெற்றி அடைந்து உள்ளீர்கள். இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த எல்லாருக்கும் என் நன்றிகள். அடுத்து எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னெடுப்பு எடுக்க உள்ளோம். இன்னும் 10 ஆண்டுகளில் செமி கண்டெக்டர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும். 250 பள்ளிகளில் தேர்வு செய்து ஒவ்வொரு பள்ளியிலும் 4 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க இருக்கிறோம். டிசம்பர் கடைசியில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இப்போது தேர்வாகி உள்ள நீங்கள் உங்கள் ஜூனியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "சென்னை ஐஐடியில் என்னை சிறப்பு விருந்திநராக வரவேற்று அழைத்து இருப்பது விட வேறு என்ன பெருமை வேண்டும்.
புதிதாக 87 குழந்தைகளை பெற்றெடுத்த மாதிரி இருக்கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது எல்லாம் நடைபெறும் போது மகிழ்ச்சியாக உள்ளது. போட்டி அரசு பள்ளிக்கும் ஐஐடிக்கும் தான். நாங்கள் திறமை மிக்க மாணவர்களை கொடுக்கிறோம். நீங்கள் எவ்வளவு பாடத்திட்டங்களை உருவாக்குகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்" என கூறினார்.
இந்த பாடத்திட்டதில் படிப்பதன் மூலம் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றக்கூடிய திட்டம், ஐஐடி படிப்பது என்பது எங்களின் பெரும் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. இதர நிறுவனங்களில் படித்தை காட்டிலும் ஐஐடியில் படிக்கிறோம் என்றால் அது முற்றிலும் வேறு, எங்களின் இந்த பயிற்சி அனைத்து விதத்திலும் ஆசிரியர்கள் ஊக்கத்தை அளித்தனர்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் CGIAR-ன் நிகழ்ச்சி..முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையெழுத்து