தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் - பிளஸ் டூ தேர்வு எப்போது

anbil
அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Jun 1, 2021, 12:41 PM IST

Updated : Jun 1, 2021, 1:12 PM IST

12:36 June 01

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர், " சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்.அதை பொறுத்தே தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும். 

ஆன்லைன் கல்விமுறையைக் கண்காணிப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட உள்ளது. அந்தக்குழு,கல்விக்கட்டணம் தொடர்பாக , தனியார்ப் பள்ளிகளில் வரும் புகார்கள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகம் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Last Updated : Jun 1, 2021, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details