தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 6:10 PM IST

Updated : Jul 16, 2020, 7:44 PM IST

ETV Bharat / state

'அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அமைச்சர் கே.பி. அன்பழகன்
அமைச்சர் கே.பி. அன்பழகன்

18:02 July 16

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் தற்பொழுது 109 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமார் 92 ஆயிரம் இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

இதுபோன்று தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்விப் பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்புக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்த இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணங்களை வங்கியில் செலுத்தி, அதன் ரசீதை தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூல்நிலை உள்ளது.

தற்போது முதலமைச்சரின் உத்தரவின்படி புதிய முயற்சியாக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியிலும், அதேபோன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதி முதல் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும் இதுகுறித்து சந்தேகங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 044 22351014, 044 22351015 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாதனை மாணவி ஸ்ரீதேவிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

Last Updated : Jul 16, 2020, 7:44 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details