கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கஸ்தூரி நாயக்கன்புதூரில் இருக்கும் தனது பாட்டியை அங்கு தங்கி கவனித்துவந்தார்.
இந்நிலையில், 2019 மார்ச் 25ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, உடலை வேறு இடத்தில் வீசி சென்றுவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலர்கள், சந்தோஷ்குமாரைக் கைதுசெய்து, அவருக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டின் கீழும், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு-செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து 2019 டிசம்பர் 27இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி சந்தோஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.