கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அறிஞர் அண்ணா பெயரையும், எம்ஜிஆர் பெயரையும் சூட்டி தமிழ்நாடு அரசு அறிவித்தது. அறிஞர் அண்ணாவின் பெயரை சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கும், எம்ஜிஆரின் பெயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ஏற்கனவே சூட்டி கெளரவப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் அதே பெயரைச் சூட்டியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரையும், ஏழை, எளிய மக்களிடம் ஐந்து ரூபாய் பெற்று மருத்துவம் பார்த்து மறைந்த மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரையும் சூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.