சென்னையில் 36வது வணிக தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வணிகர் எழுச்சி மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட சில்லரை வணிக வியாபாரிகள் பங்கேற்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது, "மாநாட்டிற்கு வணிகர் சங்க பேரமைப்பு, பேரவை என அனைத்து சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வணிகர் எழுச்சி மாநாடு; பால் விற்பனைக்கு இன்று சிக்கல்!
சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் நடக்கும் வணிகர் எழுச்சி மாநாட்டில் அனைத்து பால் முகவர்களும் கலந்துகொள்வதால், மாநிலம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கமும் ஆதரவளித்து காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கடைகளை அடைத்து மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் நடைபெறும் மாநாடு என்பதால் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். சில்லரை வணிகர்கள் கடையடைத்து மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதால் இன்று 50 விழுக்காடு பால் தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமின்றி பொதுவாக பால் முகவர்கள் காலை 7.30 மணிக்கு வியாபாரம் முடித்து கடையை அடைப்பார்கள். இன்று தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் 9 மணிவரை பால் விநியோகம் செய்வார்கள். மாலை 5 மணிக்கு மேல் பால் விற்பனை வழக்கம்போல செய்யப்படும்", என்றார்.