இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனியார் பால் நிறுவனங்கள் தொடங்கி, அனைத்து பால் நிறுவனங்களும் ’பால் கொள்முதல் விலை உயர்வு, பால் கொள்முதல் குறைவு’ என்ற காரணத்தை கூறி பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து, பால் முகவர்களுக்கு எவ்விதமான அறிவிப்புகளும் வழங்கப்படுவதில்லை. பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள் விலை, பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள், பால் நிறுவனங்களைப் போல பால் முகவர்களுக்கும் உள்ளது.
எனவே, விலை உயர்விற்கு ஏற்ப பால் முகவர்களின் வருமானம் உயர்ந்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். இத்தகைய காரணங்களுக்காக, பால், தயிர் உள்ளிட்டவற்றுக்கான கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை விலை உயர்வுக்கு ஏற்ப வழங்க வேண்டும்.