Middle School Headmaster Promotion: பள்ளிக்கல்வித்துறையில் 413 ஒன்றியங்களில் 836 பேர் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு 29ஆம் தேதி நடைபெற்றது. அதில் 2 ஆண்டிற்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தவர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.
அப்போது 671 பேரில் 592 பேர் அவர்கள் பணியாற்றிய மாவட்டத்திலும், 79 பேர் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பணி மாறுதல் பெற்றனர்.
மேலும் 2 ஆண்டிற்கும் குறைவாகப் பணியாற்றி 2 பேரும் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணியிட மாறுதல் பெற்றனர்.