தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பயன்பாட்டுக்கு வந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம்!

மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கும் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்தை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

microbial-fertilizer-plant
microbial-fertilizer-plant

By

Published : Dec 10, 2019, 12:32 PM IST

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் சேர்வதால் அந்த குப்பைகளை அவனியாபுரம் அடுத்துள்ள வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தரம் பிரித்து உரமாக மாற்றி மீண்டும் மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு குப்பைகள் அதிகளவில் சேர்வதால் அந்தந்த மண்டலங்களில் குப்பைகளைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டு 5 இடங்களில் உரக் கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட ராஜீவ் காந்தி நகரில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம்

இந்த உரக் கிடங்கில் இரண்டு உரம் தயாரிக்கும் அரவையைக் கொண்டு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரவையில் அரைக்கப்பட்ட உரங்கள் பதப்படுத்தப்படுவதற்கு இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த உரங்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த உரக்கிடங்கை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இதையும் படிங்க:ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்... குடியுரிமை மசோதா குறித்து நடிகர் சித்தார்த் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details