தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்ஜாம் புயலால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பா..? மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது என்ன..? - அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம்

CMRL Anouncement: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

michaung cyclone affected the metro services CMRL management issued an update
சென்னை மெட்ரோ

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:43 AM IST

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயலானது வட- வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு 130 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த புயல் மணிக்கு 19 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் இன்று நள்ளிரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவடங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் குறித்த அப்டேட் பின்வருமாறு,

  • செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சுற்றி 4 அடிக்குத் தண்ணீர் தேங்கியுள்ளதால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது. பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையம் மூலம் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தின் இருசக்கர வாகன நிறுத்தத்தில் மழைநீர் அதிகரித்து 4 அடிக்குத் தேங்கியுள்ளது. அந்த வாகன நிறுத்தத்தில் ஒரு சில இரு சக்கர வாகனங்கள் உள்ளது.
  • கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முன் பக்க சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ரயில் நிலையத்திற்கு ரோகிணி தியேட்டர் மேம்பாலம் வழியாக வரலாம்.
  • அரும்பாக்கம் ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் நிலையம் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
  • அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வாலாஜா சாலை சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் வழி மூடப்பட்டுள்ளது. பயணிகள் மற்ற வழிகளில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லலாம்.
  • சென்னை மெட்ரோவின் மேற்குறிப்பிட்டுள்ள பாதைகள் தவிர மற்ற ரயில் நிலைய தெருக்களில் மட்டும் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது.
  • சென்னை மெட்ரோ சேவை வழக்கம் போல காலை 5 மணிக்கு இன்று தொடங்கியது.
  • மெட்ரோ பயணிகள் மழைக்கு ஏற்றவாறு தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
  • சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு இந்த மழைக்காலத்தில் சிறந்த சேவையை வழங்கக் கடுமையாக உழைத்து வருகிறது. எனினும் ஒரு சில இடங்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்காக வருந்துகிறோம்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் எதிரொலி: கோவை - சென்னை இடையிலான ரயில் சேவைகள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details