தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு செல்லும்... ஈபிஎஸ் பொதுச்செயலாளராக செயல்படலாம்... உயர் நீதிமன்றம் அதிரடி...

ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
EPS, ஈபிஎஸ்

By

Published : Sep 2, 2022, 10:47 AM IST

Updated : Sep 2, 2022, 11:39 AM IST

சென்னை: கடந்த ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனிநீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுக்குழு செல்லும் என்றும் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முன்தாக இருந்த நிலையே இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஆக. 27ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் 3 மணி நேரமும், ஓ பன்னீர்செல்வம் 2 மணி நேரமும் வாதம் செய்யப்பட்டது.

ஈபிஎஸ் தரப்பு:எடப்பாடி பழனிச்சாமி சார்பில், ஆஜரான வழக்கறிஞர்கள், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். குறிப்பாக, ஜூலை 11 பொதுக்குழுவுக்கு ஜூலை 1ஆம் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என்றும் தெரிவித்தனர்.

'கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா?' என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது, யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள், "ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது. கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள். தனி நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டது.

தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி தீர்ப்பு உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டனர்.

ஓபிஎஸ் தரப்பு: பன்னீர்செல்வம் தரப்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், "அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் உறுதியாக இருந்ததார்.

ஜூன் 23இல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில்தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல எனவும் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 அன்று கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது.

சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் மட்டுமே பதவிகள் காலியானதாக கூறலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை

அன்றே விசாரணை நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

Last Updated : Sep 2, 2022, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details