தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா விதிகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்' உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! - முதலமைச்சர் எடப்பாடி

சென்னை: கரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும், அவற்றை கூட்டு பொறுப்புணர்ந்து அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 22, 2021, 7:27 PM IST

கடந்தாண்டு(2020) அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கும் நிகழ்ச்சியில், கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விதிகளைப் பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அதை அரசு கண்காணிக்கவும் அறிவுறுத்தினர். சென்னையில் மட்டுமே பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதாகவும், மற்ற இடங்களில் அவ்வாறு அணிவதில்லை என்றும் கவலை தெரிவித்தனர்.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும், அவற்றை பின்பற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். கரோனா தடுப்பு விதிகளான முகக் கவசம், தனிமனித இடைவெளி, முறையாக கைக் கழுவுதல் ஆகியவற்றை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details