சென்னை:விவசாய சங்க தலைவரான அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'தஞ்சாவூர் மற்றும் கடலூரில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ததற்கான தொகையாக 157 கோடி ரூபாய் அளிக்க வேண்டியிருந்ததாக கூறியுள்ளார். ஆனால், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை என்பதால் நிலுவை தொகையை தங்களுக்கு வழங்க நிலுவை தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மே.10) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முழு தொகையும் தங்களால் வழங்க இயலாது எனவும், 57 சதவீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இதன் படி, தாங்கள் 78 கோடி ரூபாய் வழங்குவதாகவும், இதில் 45 கோடி ரூபாயை ஏற்கனவே டெபாசிட் செய்து விட்டதாகவும், அந்த தொகையில் 37 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நுழைவுக்கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தைக்கான நோக்கத்தையே சிதைக்கும்: உயர்நீதிமன்றம்