தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனந்த் மஹிந்திராவுக்கு எதிரான புகார் மனு ரத்து!

மஹிந்திரா நிறுவனம் மற்றும் அதன் நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு எதிரான நம்பிக்கை மோசடி புகாரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனந்த் மஹிந்திராவுக்கு எதிரான புகார் மனு ரத்து
ஆனந்த் மஹிந்திராவுக்கு எதிரான புகார் மனு ரத்து

By

Published : Feb 28, 2022, 10:50 PM IST

சென்னை: மஹிந்திரா கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலரான ராஜராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் கார் ஒன்று முன்பதிவு செய்து, முழுத்தொகையான 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செலுத்தியுள்ளார்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி வாகனத்தை வழங்காததால், மஹிந்திரா நிறுவனம் மற்றும் அதன் நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் டீலருக்கு எதிராக புதுச்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.

இந்தப் புகாரை ரத்து செய்யக்கோரி ஆனந்த் மஹிந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், டீலருக்கும், புகார்தாரருக்கும் இடையிலான பிரச்னையில், எந்த பரிவர்த்தனையிலும் தொடர்பில்லாத தனக்கு எதிராக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மஹிந்திரா நிறுவனம்

இந்த மனுவை இன்று (பிப்.28) விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர் ஆனந்த் மஹிந்திராவை நேரில் சந்தித்ததாகப் புகார்தாரர் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றும், டீலருடனான பிரச்னையில் மனுதாரருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறி, புகாரை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி ஜெயக்குமார் மனு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details