சென்னை: பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்ட 'தாமரை சின்னம்' ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவருமான காந்தியவாதி டி. ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்து உள்ளதாகவும்' குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!