தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் 2 வழக்கு: தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட அனுமதி - lyca appeal

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல்செய்யபட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
இந்தியன் 2 வழக்கு

By

Published : Aug 6, 2021, 2:01 PM IST

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடைவிதிக்கக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில், உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகிவருகிறது. இந்தியன் 2 ஐ முடித்துக்கொடுக்காமல் வேறு படத்தை சங்கர் இயக்கத் தடைவிதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்துக்கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடைவிதிக்கக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல்செய்யபட்ட மேல்முறையீட்டு மனுவானது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லைகா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைகா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க:ஐஐடி இடஒதுக்கீடு: ராம்கோபால் ராவ் குழு அறிக்கையை நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details