சென்னை:பீட்டா (PETA - People for the Ethical Treatment of Animals ), டபிள்யு.வி.எஸ்.(WVS - Worldwide Veterinary Service), ஐ.பி.ஏ.என் (IPAN - India Project for Animals and Nature) ஆகிய விலங்குகள் அமைப்புகளுக்கு அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதாகவும், கால்நடை ஆராய்ச்சி சம்பந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும், அதற்கு அரசிடம் உரிய அனுமதியைப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப்.26) தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் முத்துக்குமார் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.