சென்னை: மும்பையை தலைமையிடமாக கொண்டுச் செயல்படும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆன்லைனில் ரம்மி விளையாடிவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, மார்ச் (2023) 2-ம் தேதி 26 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த மணிகண்டன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், எப்படி உயிரிழந்தார்? அவர் உயிரிழக்கும் போது அவரின் வங்கி கணக்கு நிலை என்ன? ஆன்லைன் நிறுவனம் சார்பாக ஏதாவது ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதா? ஆன்லைன் விளையாட்டால் பெற்ற வருமானத்தில் வரி எவ்வளவு கழிக்கப்பட்டது? யாருடன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டார்? அவர்களின் பான் எண்? ஆதார் விவரங்கள்? மற்றும் 2016 முதல் ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்துக்கான வருமானம் எவ்வளவு? உரிய அனுமதி பெற்று நடத்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளது.