தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! - today latest news in tamil

Anticipatory bail to former minister chelapandian: முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

anticipatory bail to former minister chelapandian
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 2:20 PM IST

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி உள்பட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை அடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கேட்டு செல்லபாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லப்பாண்டியன் தரப்பில், அரசின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை மட்டுமே விமர்சித்ததாகவும், முதலமைச்சருக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த மனுவில், 2011 முதல் 2014 வரை அமைச்சராக இருந்த முறையில் முதலமைச்சர் பதவி மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து, இது போன்று எதிர்காலத்தில் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, செல்லப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விருதுநகரில் மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு; ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!

ABOUT THE AUTHOR

...view details