தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில மொழிகளில் யுபிஎஸ்சி நடத்தக்கோரிய மனு: பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்

யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

By

Published : Sep 8, 2021, 3:53 PM IST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரி தியாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்.08) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக எடுத்துரைத்தார்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவலக மொழியான ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்குமாறும், அதனை எட்டு வாரங்களுக்குள் பரீசிலித்துஉரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு: விசாரணை செப். 16-க்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details