சென்னை:மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய சென்னை ஐஐடி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறைச்சிக்காக கால்நடைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு பல்வேறு புதிய சில அறிவிப்பினை வெளியிட்டது.
நாடெங்கும் இறைச்சிக்காக மாடுகள் அதிகளவில் விற்கப்படுவதனை தவிர்க்கும் விதத்திலும் இந்த அறிவிப்புகள் வெளியாகின. இந்த அறிவிப்பிற்கு நாடெங்கும் பல்வேறு தரப்பு மக்களிடையே கண்டனங்கள் வலுப்பெற்றது. இதனை எதிர்க்கும் நோக்கத்தில் சென்னை ஐஐடி வளாகத்தினுள் மாட்டுகறி உண்ணும் விழாவினை 2017ம் ஆண்டு மே மாதத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
அம்பேத்கர் வாசகர் வட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவிற்கு ஏபிவிபி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வளாகத்தினுள் இவர்களிடையே ஏற்பட்ட மோதலால் மாணவர் ஒருவர் காயமடைந்தார். இதனை கண்டிக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2017 மே 30ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் விதத்தில் கல்லூரி தனிக்குழு அமைத்து விசாரணையை மேற்கொண்டது.
இதையும் படிங்க:Video Leaked: கோர்ட் முன்பு மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி.. தேனியில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!