சென்னை:சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது என்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதே கோயிலில் பணிபுரிந்து வந்த சுப்ரமணிய குருக்கள் அந்த அறிவிப்பினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சுகனேஸ்வர் கோயிலில் பணிபுரிந்து வந்த சுப்ரமணிய குருக்குள் தரப்பில், கோயில் நிர்வாக அதிகாரியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் ஆகமத்தின் அடிப்படையில் இல்லை என்றும் ஆகமங்களுக்கு மட்டுமே சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது. வேதங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது இல்லை என குறிப்பிட்டப் பட்டிருந்தது.
இந்த வழக்கில், இந்து அறநிலை துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், குறிப்பிட்ட கோயில்களில் பின்பற்றக்கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோயில் அர்ச்சகர்களிடமிருந்து, தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்காதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க மாட்டோம் என்று வாதிட்டார்.
இரு தரப்பினரிடையே வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், அனைத்து பிரிவினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோயிலை கண்டறிய, சொக்கலிங்கம் தலைமையில், உயர் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும், அந்த குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடியும் வரை எப்படி அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்றும் மேலும் குறிப்பிட்ட ஆகமத்தை பூர்த்தி செய்யாமல் ஒருவரை எப்படி அர்ச்சகராக நியமிக்க முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.