தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2022, 7:22 AM IST

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ?.. 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றும், பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-ordered-should-not-take-any-decision-even-if-it-discusses-new-resolutions-in-aiadmk-general-council-meeting அதிமுக ஒற்றை தலைமை.. பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது - ஒபிஎஸ்க்கு கிடைத்த வெற்றி...
mhc-ordered-should-not-take-any-decision-even-if-it-discusses-new-resolutions-in-aiadmk-general-council-meeting அதிமுக ஒற்றை தலைமை.. பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது - ஒபிஎஸ்க்கு கிடைத்த வெற்றி...

சென்னை:ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் எப்படியாவது பொதுக்குழுவைத் தடைசெய்ய வேண்டுமென ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தனர். இந்த பொதுக்குழுகூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று (ஜூன்.22) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ? அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கவோ? இடைக்கால தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து, தீர்ப்பினை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ?

மேலும் இந்த வழக்கினை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார். அதன்படி, தலைமை நீதிபதியின் அனுமதியுடன் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, நீதிபதிகள் துரைசாமி இல்லத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற மேல்முறையீடு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டது.


அதன் பின் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, "அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. மேலும், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். . இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மிக முக்கிய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் ஒற்றை தலைமை நோக்கி நகரும் முடிவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதையும் படிங்க: பொதுக்குழு நடைபெறும் இடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details