தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சிறையில் தாக்கப்பட்ட கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

கோவை மத்திய சிறையில், வார்டன்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 7 கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:44 PM IST

சென்னை:கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாய் செங்கையம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கோயம்புத்தூர் சிறையில் கைதிகள், வார்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை பார்த்து தங்கள் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானிடம், மகனை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டேன்.

அதன்படி தினேஷை சந்தித்தபோது, அவர் வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாமலும் இருந்தது தெரியவந்தது. எனது மகன் உள்பட ஏழு விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள எனது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நான்கு சிறை வார்டன்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிறை கைதிகளே காரணம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான ஏழு கைதிகளுக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஏழு கைதிகள் மற்றும் நான்கு வார்டன்களின் மருத்துவ அறிக்கைகளை செப்டம்பர் 29ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:கொலை செய்யபட்டதாக கூறபட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்.. கால்களைக் காண்பிக்கச் சொன்ன நீதிபதி!

ABOUT THE AUTHOR

...view details