திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களை தனி நபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது எனவும், பால் கொடுப்பதை நிறுத்திய இந்தப் பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "தனி நபர்களுக்கு பசுக்களை வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும். 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும்.
கோயில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். கோ சாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனி நபர்களுக்கு இலவசமாக வழங்க தடை விதிக்க வேண்டும்.