சென்னை:மறைந்த முன்னாள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்கள், அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அதைத் தடுப்பதற்கான சட்டவிதிகளைக் காவல் துறை பின்பற்றவில்லை எனவும் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
முகுந்த் சந்த் மறைவிற்குப் பிறகு இந்த வழக்கை அவரது மகன் ககன் சந்த் போத்ரா நடத்திவருகிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இந்தச் சட்டவிதி மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறை கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவித்ததுடன், வழக்கில் தமிழ்நாடு டிஜிபியை ஐந்தாவது எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இந்த விதிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அல்லது டிஜிபி அலுவலகம் உயர் அலுவலர்களிடமிருந்து விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
காவல் துறைக்கு உத்தரவு
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது.