சென்னை: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாடல்கள் ஒலிப்பது தொடர்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காயமடைந்த சில மாணவர்கள், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதியில் அத்துமீறி நுழைந்து வார்டனையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்காடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சில மாணவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி RMT. டீக்காராமன் நேற்று (அக்.1) விசாரித்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "அன்பு, ஒழுக்கம் மூலம் நற்பண்புகளை வளர்க்கும் இடமாகவும், கல்வி அறிவைப் பெற்றுத்தரும் தளமாகவும் உள்ள பள்ளியில், மாணவர்கள் மத்தியில் வேற்றுமை உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காகத் தான் சீருடை அணிவதை அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.