தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளனவா? - தேர்தல் அறிக்கைகளில் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா

சென்னை: அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்குள்பட்டு உள்ளனவா? என ஆராய்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Mar 23, 2021, 4:18 PM IST

கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், "தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்குள்பட்டு உள்ளனவா? என ஆய்வுசெய்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது 2016ஆம் ஆண்டு ஆகஸ்டில்தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன, தற்போது உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. மேலும், இந்தக் கோரிக்கை தொடர்பாக மனுதாரர் அமைப்பு அளித்த மனுவை, தேர்தலுக்குப் பின் பரிசீலித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், இரண்டு மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க:திருப்பூரில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details