சென்னை:குற்ற வழக்கை மறைத்ததாகப் பயிற்சியின் போது காவலரைப் பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபருக்கு இரு வாரங்களில் மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் காவல்துறை குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்தராஜ். இவர், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த 2ஆம் நிலை காவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பயிற்சிக்குச் சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் கீழ்பாக்கம் குடியிருப்பில் நின்ற காவல்துறை ஜீப்புக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்த்து கைது செய்யப்பட்டார்.
இதை மறைத்து அவர் காவல்துறை பயிற்சியில் கலந்து கொண்டதாக கூறி, அவரைப் பணிநீக்கம் செய்து ராஜபாளையம் 11வது பட்டாலியன் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரவிந்தராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 'காவல்துறை வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டதால், காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் சிலருக்கு ஏற்பட்ட பொறாமை காரணமாக, நடக்காத சம்பவம் தொடர்பான வழக்கில் தன் பெயரையும் சேர்த்து விட்டதாக கூறியுள்ளார்.