தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பில்லி, சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - witchcraft

கடலூரில் பில்லி, சூனியம் வைத்ததாக கூறி பெரியம்மாவை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் பில்லி, சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்தவர்
கடலூரில் பில்லி, சூனியம் வைத்ததாக பெரியம்மாவை கொலை செய்தவர்

By

Published : Feb 28, 2023, 8:13 AM IST

சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர், தங்கள் குடும்பத்தில் ஆண்வாரிசு இருக்க கூடாது என்பதற்காக பெரியம்மா பில்லி, சூனியம் வைத்துள்ளார் எனக் கூறி, அவரை கடந்த 2009 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் போலீசார் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், சதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வு, சதீஷ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். இதில் சதீஷ் தான் கொலை செய்தார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிகாரம் காவல் துறைக்கா? வருவாய்த் துறைக்கா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details