அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகள் நிலுவையில் இருந்த போது, பல பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டதாகவும், அதற்குத் தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்தன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்-லைன் அல்லது ஆஃப்-லைன் மூலம் அரியர் தேர்வுகளை நடத்தி, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.