சென்னை: கேயம்பேட்டில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அங்குவந்த பாஜகவைச் சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்ததாக இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பிலும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்ககோரி, பாஜகவின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், 'இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கட்சிக் கொடிகளை கீழே போட்டு மிதித்ததாகவும், கல்வீசி தாக்கியதாகவும் விசிக சார்பில் குமார் என்பவர் அளித்தப் புகாரில், தன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காரணத்தினால் விசிக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை முதலில் எடுத்து கொண்டனர். இந்த தகராறு குறித்து முதல் தகவல் அறிக்கையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு எதிரானது எனத்தெரியவந்துள்ளது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏற்கெனவே சமூக வலைதளங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் கட்சி சார்ந்த சண்டைகளும் நடைபெற்று வருகிறது’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், 30 நாட்களுக்கு விசாரணை அலுவலர் முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவின் காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை முன்ஜாமீன் - உயர் நீதிமன்றம் அதிரடி - dr ambedkar birthday issue
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விசிகவினருடன் தகராறில் ஈடுபட்டதாக பதிவான வழக்கில் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு, நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை முன் ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது
இதையும் படிங்க:நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!