நளினிக்கு 3 வாரங்கள் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் - Nalini to 3 weeks
சென்னை: மகள் திருமணத்திற்கு பரோலில் வந்த நளினிக்கு திருமண ஏற்பாடுகளை மேலும் மூன்று வாரங்கள் பரோலை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
உயர்நீதிமன்றம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த நளினி மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒருமாத காலம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அவருக்கு கூடுதலாக மூன்று வாரம் பரோலை நீட்டித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.