தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனையை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Mar 30, 2021, 1:56 PM IST

தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் தாக்கல் செய்த மனுவில், ”சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை செய்யக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் 4,512 வேட்பாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

மேலும் தனது மனுவில் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுவதாகவும், முதியோரை கட்டிப்பிடிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனால் கரோனா பரவல் அதிகமாகும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:’மதுபோதை இல்லாத தொகுதி என்பதே இலக்கு’ - மதுரை மத்தியத் தொகுதி மநீம வேட்பாளர் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details