தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் யானை பராமரிப்பு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

கோயில் யானைகளை பசுமையான பரந்த வெளியில் வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

temple elephants safety
கோயில் யானை

By

Published : Jul 23, 2021, 2:04 PM IST

சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் 34 கோயில் யானைகள் உள்ளன. மதுரை அழகர் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில் யானைகள் அலுவலர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளன.

கோயில் யானைகள் சிறிய இடத்தில், சிமெண்ட் தரையில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால், கால்களில் தொற்று பாதித்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், கோயில் யானைகளை பெரிய அளவிலான இடத்தில் இயற்கை சூழலில் வைக்க வேண்டும். அவற்றுடன் பெண் யானையும் உடனிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details