தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசுக்கு எதிராக பேரணி; காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - தமிழக அரசு

CPM procession: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சிபிஎம் போரணி: காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு!
சிபிஎம் போரணி: காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 1:58 PM IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பிரச்சார பயணங்கள், பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டிஜிபிக்கு அக்டோபர் 10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக்.20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது என அரசு வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டது. இது போன்ற நிகழ்வுகளுக்கு உள்ளூர் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரிடம்தான் மனு அளிக்க வேண்டுமெனவும், உள்ளூர் சூழலைப் பொறுத்து அவர்கள் முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டால் உள்ளூர் சூழலைப் பொறுத்து முடிவு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, உள்ளூர் காவல் துறையிடம் மனு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து ஏழு நாட்களில் அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால், மாற்று தேதியில் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதி - 15 நாட்களில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details