தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவில் எந்தெந்த மாநகராட்சிகளில் மண்டலவாரியாக பெண்களுக்கு இடஒதுக்கீடு? - நீதிமன்றம் - மாநகராட்சிகளில் மண்டலவாரியாக பெண்களுக்கு இடஒதுக்கீடு

நாட்டின் எந்தெந்த மாநகராட்சிகளில் மண்டலவாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

By

Published : Dec 16, 2021, 6:47 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று (டிச.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசியல் சட்டத்தின் 243 டி உட்பிரிவு 3இல் கூறியுள்ளபடி மூன்றில் ஒரு பகுதிக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்வதாகவும், அந்த வகையில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால், வார்டு வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டார்.

இதையடுத்து, வார்டு வாரியாக இல்லாமல் மொத்தமாக மாநகராட்சியை ஒரு யூனிட்டாக கருதி ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் மண்டல வாரியாக பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: அனைத்து மொழிகளிலும் யுபிஎஸ்சி தேர்வுத் தாள் - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details