சென்னை:காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த டென்பின் பவுலிங் விளையாட்டு வீரர் ஷேக் அப்துல் ஹமீது. டில்லியைச் சேர்ந்த இவர், சென்னை கோவிலம்பாக்கத்தில் 4.12 ஏக்கர் நிலத்தை வாங்க பாலாஜி, மீனா ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
நிலத்துக்காக, 23 கோடி ரூபாயை பெற்று தன்னை மோசடி செய்து விட்டதாக, டென்பின் பவுலிங் விளையாட்டு வீரர் ஷேக் அப்துல் ஹமீது சென்னை பள்ளிக்கரணை காவல்துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் பாலாஜி, மீனா உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை பள்ளிக்கரணை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாலாஜி, மீனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என, ஷேக் அப்துல் ஹமீது சார்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்டது.