சென்னை: மத்திய முன்னாள்அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், 2015ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன்மூலம் பெற்ற தொகையான ஆறு கோடியே 38 லட்சம் ரூபாயை வருமானவரி கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, 2014-2015 மற்றும் 2015-2016ஆம் ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்கை மறுமதிப்பீடு செய்வது குறித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்துசெய்யக் கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், போதுமான அவகாசம் அளித்து நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டது.