தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 3, 2023, 8:23 PM IST

ETV Bharat / state

அகம்பாவ சண்டைக்கு குழந்தைகளை அடகு வைப்பதா? - நீதிபதிகள் வேதனை

அமெரிக்காவிற்கு தனது குழந்தைகளை அனுப்ப அனுமதிக்கக்கோரி நபர் ஒருவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணையில், பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டைக்கு குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி, அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தானும், தன் மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக உள்ளதாகவும், பிறப்பால் தமது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்த மனைவி, அவர்களை மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வரவில்லை என்பதால் மீண்டும் அமெரிக்கா அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இரட்டைக் குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை முறைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறி, ஆறு வார காலத்திற்குள் குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்சென்று தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பெற்றோரிடையே ஏற்படும் தேவையற்ற அகம்பாவ சண்டையில் அடகு வைக்கப்படுவதால், குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல, ஒருநாளைக்கு இரண்டு, மூன்று வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவாக விசாரணைக்கு வருவதாகவும் நீதிபதிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Online Gaming: போலீஸாரை ரம்மி விளையாடச்சொல்லும் சிபிசிஐடியினர் - சுவாரஸ்யப் பின்னணி

ABOUT THE AUTHOR

...view details