சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்ததை ஏற்ற கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகப் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில், ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதே போல, கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க:ரூ.4,500 கோடி மணல் கொள்ளை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் - முழு விவரம்