சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் (Depressed Class Land) அமைந்துள்ளது என குற்றம் சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து கடந்த 2019ஆம் ஆண்டில் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பாஜகவின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம்: வழக்கை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு!