தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆலமரங்கள், அரச மரங்கள், வேப்ப மரங்கள், புங்கை மரங்கள், பூவரசு மரங்கள், அசோக மரங்கள், புளிய மரங்கள், நாவல் மரங்கள், மகிழம் பூ மரங்கள், மாமரங்கள், பாதாம் மரங்கள், தேக்கு மரங்கள், கொய்யா மரங்கள், யூகலிப்டஸ் மரங்கள், பாக்கு மரங்கள் மற்றும் காட்டு மரங்கள் என 160க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
கரையான், பூச்சிகளால் மரங்கள் அழியாமல் பாதுகாக்க மருந்துகள் கலந்த சுண்ணாம்பு கலவையை பூசும் பணிகளை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மேற்கொண்டனர்.