முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுற்றது. ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் தனித்து செயல்பட்டனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர சசிகலா விரும்பினார். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வர எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தமிழ்நாட்டின் ஏழாவது முதலமைச்சராக பதவியேற்றார். மக்களுக்கு பரிட்சயம் இல்லாத முகம் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார். ஆளுமைப் பண்பு இல்லாதவர் என்றும் கட்சியை வழிநடத்த தெரியாத அதிமுக முதலமைச்சர் எனவும் விமர்சிக்கப்பட்டார். இவரது ஆட்சி பத்து நாள் கூட தாங்காது . ஆறுமாதம் தாக்கு பிடிப்பதே கடினம் என்று வார்த்தை ஜாலங்களால் நாளொரு வண்ணம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார்.
இந்த நிலையில் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழிநடத்தி வருகிறார். இவரது செயல் திறனை கண்டு எதிர்க்கட்சி தலைவர்களும் சில நேரங்களில் பாராட்டி வருகின்றனர். சிறந்த நிர்வாகியாகவும் மக்களவைத் தேர்தலில் அதிரடி கூட்டணி முடிவுகள் என பல செயல்களை புரிந்துள்ளார். மக்களுக்கான நல்ல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசுடனும் முரண்டு பிடிக்கவில்லை. இணக்கமாகவே அரசியல் புரிந்து வருகிறார்.