மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர்.