தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சைக்காக 7 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை - உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - chennai district news

சென்னை: கரோனா சிகிச்சை கட்டணமாக 10 நாளைக்கு 7 லட்சம் வசூலித்த எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உயர் நீதிமன்றத்தில் புகார்
எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உயர் நீதிமன்றத்தில் புகார்

By

Published : Oct 3, 2020, 3:33 PM IST

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் சார்பில், வழக்கறிஞர் டி.ஆர் பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "கரோனா பாதிப்பு காரணமாக ஜூலை மாதம் 25ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் எனது தந்தை குமாரை அனுமதித்தேன். சிகிச்சைக்கு 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளேன். ஆனாலும் உரிய சிகிச்சை வழங்காததால் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தந்தை இறந்து விட்டார்.

கரோனா தொற்றிற்கு மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எம்.ஜி.எம் மருத்துவமனை எந்த விதிகளையும் பின்பற்றாமல், அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் தந்தையின் உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்பந்தப்படுத்தி மொத்தமாக 10 நாளைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்துள்ளனர்.

இதுதவிர தந்தையின் மருத்துவ செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற விவரங்களை கேட்ட நிலையில், தனது தந்தையின் மருத்துவ விவரங்களுக்கு பதிலாக வேறு ஒருவரின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் பணம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்ற மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு மனு அளித்தேன். அந்த மனு மீது விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு நிர்ணயித்த மருத்துவ கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த தொகையை மருத்துவமனை நிர்வாகம் திரும்ப தர வேண்டும். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவின்படி பெரும்பாக்கத்தில் காவல் நிலையம் அமைக்க அரசாணை!

ABOUT THE AUTHOR

...view details