சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (மே 24) அனுமதிக்கப்பட்டார்.
வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.