இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும். மணிக்கு ஒரு முறை தங்களது கைகளை சோப் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அவரவர் பயன்படுத்தும் பொருள்களை டேபிள், சேர், கம்ப்யூட்டர், மவுஸ், கீ போர்டு, டூல்ஸ் உள்ளிட்டவற்றை அவர்களே தங்களது பணி நேரத்தில் இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பணி முடிந்து போகும்போது அவரவர் பயன்படுத்திய பொருள்களை சுத்தம் செய்தல் வேண்டும். காய்ச்சல், கரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அவரவர் பணியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களும் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் 'ஆரோக்கிய சேது' செயலியை டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். அதன்படி கரோனா தொற்று உள்ளவர்கள் அருகில் கண்டறியப்பட்டால் உடனடியாக 104 என்ற எண்ணுக்கு தொலைபேசி அதுபற்றி தகவல் கொடுக்க வேண்டும். பணியாளர்கள் பணியின்போது 50 மில்லி கிருமி நாசினி வைத்திருக்கவேண்டும். நடத்துனர் ஓட்டுநர்களுக்கு பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது.