தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கப்படுவதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம்
மாநகரப் போக்குவரத்துக் கழகம்

By

Published : Jun 24, 2021, 2:33 PM IST

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டை (ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்) 29 மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. இது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

பேருந்துகள் நிறுத்தம்

கரோனா தொற்று இல்லாத காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 1 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் பயண அட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கரோனா தொற்றின் காரணமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்த காலகட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.

பயண அட்டை வழங்க கால அவகாசம் நீட்டிப்பு:

தற்போது, தொற்று பெருமளவு குறைந்து மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள மாதாந்திர சலுகை பயண அட்டையை வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்பைடில் வரும் ஜூன் 26ஆம் தேதி வரை சலுகை பயண அட்டை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29 மையங்களில் இந்த பயண அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு வரும் ஜூலை 15ஆம் தேதி வரை பயணம் செய்யலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மீது பேருந்து மோதி விபத்து

ABOUT THE AUTHOR

...view details